இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது. கிராம சபை கூட்டதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அனைவரையும பங்கேற்கும் படி அரசு கேட்டு கொண்டுள்ளது.
மே 1 ஆம் தேதி நடை பெற இருந்த கிராம சபை கூட்டம் தேர்தல் காரணமாக இன்று ( ஜூன் 28) நடை பெறுகிறது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் இந்த கூட்டமானது நடை பெற உள்ளது. இது பற்றி கிராம மக்களுக்கு முறையாக தெரிவிக்க பட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் படி கிராம நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
கிராம சபை நிர்வாகம் பலவற்றை விவாதிக்க உள்ளது. முக்கியமாக கிராம சபையின் பொது நிதியில் இருந்து செலவழித்த தொகை மற்றும் செலவழித்த காரணம், இருப்பு தொகை குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் 2019-2020 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்திட்ட அறிக்கையில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை குறிப்பிட வேண்டும்.
கிராம சபை கூட்டத்தில் வைத்து ஆக்கப்பூர்வமாக பல விவாதங்கள் நடை பெற உள்ளன. இதில் திட்ட அறிக்கையை விவாதித்தால், குடிநீரை சிக்கனமாக பயன் படுத்தல், கிராம வளர்ச்சிகாக நெகிழி பயன் படுத்துவதை தடை செய்தல், 2019-2020 ஆம் ஆண்டிற்கான, சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்தெடுத்தல், கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வைத்து கொள்வதற்கான உறுதி மொழி எடுத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேலை ஊறுதி செய்யும் திட்டம், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர் நிலைகளை பாதுகாத்தல், மகளிர் சுய உதவி குழுக்களின் செயல் பாடுகள் குறித்து விவாதித்தால் மேலும் கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை செய்தல் போன்றவை விவாதிக்க பட உள்ளன.
இன்று நடை பெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் மட்டுமல்லாது, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள் என அணைத்து தரப்பினரும் பங்கேற்கும் படி கிராம நிர்வாக சபை கேட்டு கொண்டது.
Anitha Jegadeesan
Krishi Jagran