234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக இன்று நடைபெற்றத் தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர், நடிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
தேர்தல் களம் (Election field)
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி, வேட்பு மனுத்தாக்கல், தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, அனல் பறக்கும் பிரசாரம் என தமிழக அரசியல் களம் கடந்த ஒரு மாதகாலமாக பரபரப்பாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது சூறாவளி சுற்றுப்பயணத்துடன் ஒருமாதமாக நடைபெற்ற பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 3998 வாக்காளர்கள் களம்கண்ட இந்த தேர் நிலையில் இன்று வாக்குபதிவு நடைபெற்றது. இத்துடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும், ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது
வாக்குப்பதிவு (Voting)
சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு (Vote Polling) இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற வாக்குபதிவில் கொரோனா (Corona) தடுப்பு விதிகளைப் பின்பற்றப்பட்டன.
காலை முதலே அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
அரசியல் பிரமுகர்கள் (Political figures)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
திரைத்துறையினர் (Film Stars)
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினியும், ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலும் வாக்களித்தனர். இதேபோல், அஜித், விஜய், குஷ்பு, ஐஸ்வரியா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர் மற்றும் நடிகைகளும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு உடை (Corona Protective Style)
6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்பி கனிமொழி, மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு கொரோனா பாதுகாப்பு உடை அணிந்துவந்து வாக்களித்தார்.
இரவு 7 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்துடன், புதுவை மற்றும் கேரளாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுவையில் 80%த்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை (Count of votes)
இன்று பதிவான வாக்குகள் அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி எண்ணப்பட உள்ளன. எனவே தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற சாமானியர்களின் தீர்ப்பு அன்றைய தினம் தெரிந்துவிடும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்