பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச சிலிண்டரை வாங்க நினைப்பவர்கள் இது ஒரு முக்கியமான செய்தி.
அரசின் இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான தகுதி உங்களிடம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது உங்களிடம் சில ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும்.
தகுதி
இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும். விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது குறைந்தது 18 ஆக இருத்தல் வேண்டும். இதைத் தவிர, அதே வீட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் வேறு ஏதேனும் சிலிண்டர் இணைப்பு இருந்தால், அவர்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் கிடைக்காது. மிகவும் முக்கியமாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
என்னென்ன தேவை?
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு E-KYC செய்வது அவசியம்.
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் கார்டு
- மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு - அதில் நீங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்றதற்காக ஆதாரம் இருக்க வேண்டும்.
- ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டைத் தேவைப்படும்.
- வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு தேவை.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
எப்படி வாங்குவது?
முதலில், உஜ்வாலா யோஜனா திட்டத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.pmuy.gov.in/en/ என்பதில் செல்ல வேண்டும்.
பாரத் கேஸ், இண்டேன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) ஆகியவற்றின் புகைப்படங்கள் அங்கே இருக்கும்.
உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்
இதற்குப் பிறகு, உங்களுடைய அனைத்து விவரங்களை நிரப்பவும்.
இத்திட்டத்திற்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். அதை நிரப்பி எரிவாயு ஏஜென்சி டீலரிடம் சமர்ப்பிக்கவும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, எல்பிஜி எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
மேலும் படிக்க
50,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 4 பைக்குகள்- இதோ விவரம்