இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் உணவு சமைக்க பெரும்பாலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் எரிவாயு விலை உயர்வு விண்ணைத் தொட்டு வருவதால், மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் தத்தலிக்கின்றனர்.
இதற்கு ஒரு நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு சிறப்பு சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் நீங்கள் இலவசமாக எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்தச் சிறப்புச் சலுகையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை கீழே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்காக Paytm இந்த சிறந்த சலுகைகளை வழங்குகிறது
இந்த கேஸ் புக்கிங் சலுகை பேடிஎம் மூலம் கிடைக்கிறது. Paytm மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்வதினால், வாடிக்கையாளர்கள் ஒரு எரிவாயு சிலிண்டரை முற்றிலும் இலவசமாகப் பெற்றிடலாம். எல்.பி.ஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் புதிய பயனர்களுக்காக Paytm இந்த அற்புதமான சலுகையை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
Paytm இன் இந்த புதிய சலுகையின் கீழ், புதிய பயனர்கள் முதல் முன்பதிவில் ரூ. 30 கேஷ்பேக் பெறலாம். Paytm செயலியில் பணம் செலுத்தும் போது "FIRSTCYLINDER" என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்தி பூக் செய்ய வேண்டும்.
எந்த நிறுவனங்களின் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் பயனடையலாம்
மூன்று பெரிய LPG நிறுவனங்களான இண்டேன் (Indane), ஹெச்.பி மற்றும் பாரத் ஆகியவற்றின் சிலிண்டர்களின் முன்பதிவுக்கு, இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது. Paytm Postpaid எனப்படும் 'Paytm Now Pay Later' திட்டத்தில் பதிவு செய்து, பயனர்கள் அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு பணம் செலுத்தும் வசதியும் இதில் பெறலாம்
இது தவிர, ஏற்கனவே உள்ள Paytm பயனர்களும் சிலிண்டர்களை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுகிறார்கள். இதற்கு, Paytm செயலியில் பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கும் முன் வாடிக்கையாளர் 'FREEGAS' என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தினால் போதுமானதாகும். Paytm பயனர்கள் தங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தையும் கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடதக்கது.
செய்தி:
10 ரூபாய்க்கு மதிய உணவு, நடிகர் கார்த்தியின் ஏற்பாடு! எங்கே?
எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்
கேஷ்பேக் வசதியைப் பெற, வாடிக்கையாளர் Paytm செயலியில் உள்ள 'Recharge And Pay Bills' பகுதிக்குச் சென்று 'Book a Cylider' விருப்பத்தைக் கிளிக் செய்தல் வேண்டும். இந்தப் பிரிவைத் திறந்தவுடன், உங்கள் எல்பிஜி இணைப்பு தொடர்பான தகவல்களை, இங்கே நிரப்ப வேண்டும், அதில் பதிவு செய்யப்பட்ட பெயர், குறிப்பிட்ட எண், மோபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் பணம் செலுத்தும் பிரிவை நோக்கி நகர்வீர்ள். பிறகு, கீழே 'Apply Promo Code' என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.
இந்த விருப்பத்தை கிளிக் செய்து, இங்கே 'FREEGAS' குறியீட்டை உள்ளிட வேண்டியது அவசியம். குறியீட்டை உள்ளிட்ட பிறகு, 'Code applied Successfully' என்று வந்தால், உங்கள் பதிவு நிரைவு பெற்றது என அர்த்தம். இப்போது நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தவுடன் ஸ்கிராட்ச் கார்ட் வரும் அதில் நீங்கள் ஸ்கிராட்ச் செய்தவுடனே, உங்கள் பரிசை நீங்கள் பெறலாம்.
மேலும் படிக்க:
நமோ டேப்லெட் யோஜனா 2022: ரூ. 1000த்திற்கு பிரண்டட் டேப்லட், விண்ணப்பிக்க வேண்டுமா?