வாழ்வது சிறிது காலமாக இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ்ந்து, நம்மால் முடிந்ததை சேமித்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வதே சிறப்பு.
அதனால்தான் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்றார்கள் நம் முன்னோர்கள்.
அந்த வகையில், பொருளாதாரத் தேவைக்காக அடுத்தவரிடம் கையேந்தக்கூடாது என்பதில் சிலர் கவனமுடன் இருப்பார்கள்.
அப்படி, எதிர்காலத்திற்காக சிறுகச் சிறுகச் சேமிக்க வேண்டும் எனக் கருதுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்த பாலிசியைக் (LIC Policy) கொடுத்துள்ளது எல்ஐசி.
தினமும் 17 ரூபாய் மட்டும் செலுத்தினால்போதும், 25 வருடம் கழித்து தோராயமாக 4 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த பாலிசியின் பெயர் ஜீவன் பெனிஃபிட் பாலிசி. (Jeevan benefit policy)
சிறப்பு அம்சங்கள்
இந்த பாலிசியில் செலுத்தப்படும் தொகை, பங்கு சந்தையில் (Stock Market) முதலீடு செய்யப்படாது. எனவே நாம் செலுத்தும் பணத்திற்கும், முதிர்வுத் தொகைக்கும் உத்தரவாதமும் ஆயுள் காப்பீடும், கிடைக்கும்.
வயது
8 முதல் 59 வயதுடைய யார் வேண்டுமானாலும் முதலீடு (Invest) செய்யலாம்.
பாலிசி காலம்
பாலிசி செலுத்தும் காலம் 16 முதல் 25 வருடங்கள்.
முதிர்வுத்தொகை
குறைந்த பட்ச முதிர்வுதொகை (Maturity Amount) ரூ.2 லட்சம். உச்சவரம்பு கிடையாது.
பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது ஊனம் ஏற்பட்டாலே, உரிய இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் படிக்க: TNAU: Masters, PhD படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்
ப்ரிமியம்
ப்ரிமியம் தொகையாக தினமும் 17 ரூபாய் அல்லது மாதத்திற்கு 518 ரூபாய் செலுத்தலாம்.
இதன்மூலம் 25 ஆண்டுகளில் நீங்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 328 ரூபாய் செலுத்துவீர்கள்.
முதிர்வுத்தொகை
இதற்கு முதிர்வுத்தொகையாக போனஸ் சேர்ந்து, மொத்தம் 4 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடன்
இந்த திட்டத்தில் பாலிசிதார்களுக்கு கடனும் வழங்கப்படுகிறது. அதற்கு, ப்ரிமியம் தொகையை எந்தவிதத்திலும் நிலுவை வைக்காமல் 3 ஆண்டுகள் செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம்.
வருமானவரி விலக்கு
நீங்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கும், பாலிசி முதிர்வடையும்போது வழங்கப்படும் முதிர்வுத் தொகைக்கும் வருமானவரிச்சட்டத்தின்படி வரி விலக்கு (Tax Relax) உண்டு.
2 லட்சம் உத்தரவாதம்
எதிர்பாராதவிதமாக பாலிசிதாரர் மரணமடைய நேர்ந்தால், ப்ரிமியம் தொகையை நிலுவை இல்லாமல், தமது மரணம் வரை அவர் செலுத்தியிருக்கும் பட்சத்தில், வாரிசுதாரரிடம், முதிர்வுத்தொகையான 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
மேலும் படிக்க: