இன்று தமிழ்நாட்டில், கடலூர், ராமநாதபுரம், புதுக்கொட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேலும் புதுவை , காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியக்கூடும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் லேசான மழையும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் டிசம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 12ஆம் தேதி , தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் லேசான மழையும் , உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு , வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அதிகாலையில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்யாகவும் இருக்கும் .
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு(Amount of rainfall recorded in the last 24 hours)
வால்பாறை (கோயம்புத்தூர்), பிலவாக்கல் அணை (விருதுநகர்) தலா 5 செ.மி, சுரளகோடு (கன்னியாகுமரி) , கன்னியாகுமரி தலா 3 செ.மி. தக்கலை (கன்னியாகுமரி) 2 செ.மி, பர்லியார் ( நீலகிரி) , சோத்துப்பாறை (தேனி), சிற்றாறு (கன்னியாகுமரி), பூதபாண்டி கன்னியாகுமரி, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 1 செ.மி என்ற கணக்கில் மழை பதிவாகியுள்ளது.
இதுவரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: