பழுதான வாஷிங் மெஷினை சரி செய்ய சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து சர்வீஸ் மென் வராததால், பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், அந்தப் பெண் கையால் துணி துவைத்ததால், முதுகுவலிக்கு ஆளாகியுள்ளார்.
பெங்களூரு பலகெரேயை சேர்ந்த குடும்பம் ஒன்று, ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள கடையில் கடந்த 2011ஆம் ஆண்டு வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளது. வாஷிங் மெஷின் வாங்கும் போது, விலையில் இருந்து அதிகப்படியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கு கூடுதல் வாரண்டியையும் பெற்றுள்ளது.
யாரும் வரவில்லை
இந்த நிலையில், அவர்களது வீட்டில் வாஷிங் மெஷின் திடீரெனப் பழுதாகியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் பலமுறை புகார் செய்துள்ளனர். ஆனால் வாஷிங் மெஷினை சரி செய்ய யாரும் வரவில்லை என தெரிகிறது.
ஒருமுறை நிறுவனத்தின் சார்பில் வந்த நபர் ஒருவர், வாஷிங் மெஷினை புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு சென்றதாகவும், பழுது நீக்க யாரும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
ரூ.3 லட்சம் இழப்பீடு
இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வாஷிங் மெஷினை வாங்கிய நபர் வழக்குத் தொடர்ந்தார். அதில், வாஷிங் மெஷின் பழுதானதால் தனது மனைவி துணிகளை கைகளால் தொடந்து துவைத்ததால், அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெற்றதற்காக ரூ.2 லட்சம் உள்பட ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
ரூ.20 ஆயிரம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாரண்டி இருந்தும் வாஷிங் மெஷினை சரிசெய்ய வராததால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க அந்த எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இது நல்ல ஐடியாவாக இருக்கே!
மேலும் படிக்க...