News

Sunday, 23 May 2021 09:07 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கால் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் செடியிலேயே வீணானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளரி சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே நரிக்கொல்லைப்பட்டி, வளவம்பட்டி, அரவம்பட்டி, நரங்கியன்பட்டி, உரியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஏக்கரில் நாட்டு வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வெள்ளரிக்காய் சாகுபடிக்கு உழவு, தொழு உரம், விதைநடவு, களையெடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், வெள்ளரிக்காய் நன்கு வளர சத்து டானிக் மருந்து அடித்தல், வெள்ளரிக்காய் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்பட ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 110 நாட்கள் வயதுடைய இந்த வெள்ளரிக்காய் விதைத்த நாற்பதாவது நாளில் இருந்து காய்க்கத் தொடங்குகிறது.

நஷ்டம்

நீர்ச்சத்து மிகுதியாய் காணப்படும் இந்த வெள்ளரிக்காயை கோடை காலத்தில் (Summer) உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் அதிகம் பேர் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர். ஊரடங்கு (Curfew) இல்லாமல் இயல்பு நிலை இருந்திருந்தால் ஒரு ஏக்கருக்கு வெள்ளரிக்காய் ஒரு லட்ச ரூபாய் வரை விற்பனையாகும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் ஏக்கருக்கு நாற்பதாயிரம் வரை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தற்போது, மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெள்ளரிக்காயை விற்கமுடியாமல் செடியிலேயே பறிக்காமல் விட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு வாங்கிய கடனை கூட அடைக்கமுடியாத சூழ்நிலையில் இருந்த நாங்கள் இந்தாண்டு வெள்ளரி சாகுபடியில் கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். இந்தாண்டும் கொரோனா 2-வது அலையால் ஊரடங்கு போட்டதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

வெள்ளரி விற்பனை

வெள்ளரிக்காயை பஸ் நிலையம், சந்தைகள், தள்ளுவண்டிகள் மூலமாகவும் சாலையோரங்களில் கூறுகட்டியும் பெண்கள் கூடையில் வைத்து கூவிக் கூவி விற்கப்படும் இந்த வெள்ளரிப்பிஞ்சு மற்றும் வெள்ளரிப்பழத்தினை வாங்க பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் ஊரடங்கால் விற்பனை (Sales) பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். வெள்ளரிக்காயை பறிக்காமல் தோட்டத்தில் மாடுகளை மேய விட்டுளோம். 

வெள்ளரிக்காய் உற்பத்திக்கு செலவு செய்த குறைந்தபட்ச செலவுத்தொகையில் பாதியான ரூ.20 ஆயிரமாவது தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)