News

Tuesday, 02 July 2019 04:57 PM

முழு சூரியகிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணமானது 4 நிமிடங்கள் 33 நொடிகள் மட்டுமே நிகழ கூடியது. இந்த வருடத்தில் நிகழும் முதல் சூரிய கிரகணம் என்பதால் உலக மக்கள் அனைவரும் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சூரிய கிரகணம்  என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கும் நிகழ்வாகும். அதாவது சூரியனின் ஒளிக்கதிர்களை முழுமையாக சந்திரன் மறைப்பது ஆகும். இத்தகைய அரிய நிகழ்வானது இந்தியா நேரப்படி இரவில் நிகழ்கிறது என்பதால் நம்மால் பார்க்க இயலாது.  

பெரும்பாலன சூரிய கிரகணம் தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் நிகழ்கிறது, இதனால் அதன் அருகில்  அமைந்திருக்கும் நாடுகள் எளிதில்  பார்க்கும் படும் படி அமைந்து விடுகிறது.  இன்று நிகழவிருக்கும் கிரகணம் சிலி நாட்டு  நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை லா செரீனா எனும் நிகழவுள்ளது.

சூரிய கிரகணத்தின்  காரணமாக சிலி, அர்ஜெண்டினா, மற்றும் சில தெற்கு பசுபிக் நாடுகள் கிரகண சமயத்தில் இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.space.com/ என்ற இணையம் அளித்த தகவலின் படி கிரகணமானது இந்திய நேரப்படி இன்று இரவு 10: 24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை  2:14 மணிக்கு முழுமையடைகிறது என தகவல் வெளியிட்டுள்ளது.

முழுமையான  சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் நேரடியாக இந்த சூரிய கிரகணத்தைக் காண சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எக்ஸ்ப்ளோரேடோரியம் என்ற மியூசியத்தின் https://www.exploratorium.edu/  என்ற இணைய தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய நேரப்படி விடியற்காலை 12:53 மணி முதல் இதன் நேரடி ஒளிபரப்பை காணலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)