தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் (Red Alert) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கனமழை (Heavy Rain)
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for Fishers)
நவ.,26, 27: குமரிக்கடல் , தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 29 ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், நவ.,29 மற்றும் 30 தேதிகளில், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வாளர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 4 இடங்களில் கன முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு, பாதிப்பு மற்றும் சேதம் அடிப்படையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடப்படுகிறது.
மழை அளவு
வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னர் கடந்த அக்.,1 முதல் இன்று(நவ.,26) வரை தமிழகத்தில் பதிவான மழை அளவு: 58 செ.மீ.,
இயல்பாக பதிவாகும் மழை அளவு: 34 செ.மீ.,
தற்போது 70 சதவீதம் மழை கூடுதலாக பதிவாகி உள்ளது. சென்னையில் 67 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது.
மேலும் படிக்க
தமிழ்நாடு: தமிழகத்தின் சில பகுதிகளில் ரெட் அலர்ட்!
நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!