News

Thursday, 24 June 2021 11:01 PM , by: R. Balakrishnan

Credit : TN AIASA

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார். இதன் மூலம் விவசாய விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

கிராமப்பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன் வர வேண்டும். குறிப்பாக, கிராமப்பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பசுமை வீடு (Green House) திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்குதல், தெருவிளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

விவசாய பணிகள்

கிராமப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், தனிநபர் விவசாயப் பணிகளில் அதிகளவு ஆர்வம் காட்டவும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேைல உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு தரிசு நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் தரிசு நிலங்களில் அதிக அளவு விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றார்.

மேலும் படிக்க

தரமற்ற விதையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)