ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கியின் உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பேசும் பொருளாக மாறியுள்ளது.
வங்கிகளின் வாடிக்கை (The practice of banks)
வங்கிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களை ஒருபோதும், வங்கி ஊழியர்கள் மதிப்பதில்லை என்பது பல ஆண்டுக் குற்றச்சாட்டு.
அதிலும் ஏதேனும் புகார் கொடுக்கச் சென்றுவிட்டால், வாடிக்கையாளர்களை வாட்டி வதைக்கத் தவறுவதில்லை.
ஓய்வூதியதாரர்கள் (Pensioners)
குறிப்பாக ஓய்வூதியதார்கள், அரசு தங்களுக்குத் தரும் ஓய்வூதியத்தை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கச் செல்லும்போது,வங்கி ஊழியர்கள் படுத்தும்பாடு இருக்கிறதே, மனசாட்சி உள்ளவர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும். அந்த அளவுக்கு இருக்கும். நாமும் ஒருநாள் ஓய்வூதியதாரர் ஆவோம் என்பதை மறந்தே விடுகிறார்கள் இவர்கள்.
அவமரியாதை (Disrespect)
அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் SBI வங்கியின் அத்துமீறல் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஷார்ட்ஸ் (Shorts) அணிந்திருந்தததால், உங்கள் ஆடை கண்ணியமாக இல்லை, எனவே பேண்ட் போட்டுட்டு வாங்க சார் என்று கூறி அவமானப் படுத்தியிருக்கிறது SBI நிர்வாகம்.
டிரஸ் கோட் (Dress Code)
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர், தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டதுடன், எஸ்பிஐ டேக் செய்து, அவர் புகாரும் கூறினார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட்டில் வங்கிக்கு வரும் போது, இதைத்தான் அணிய வேண்டும், இதை அணியக் கூடாது என டிரஸ் கோட் (Dress Code) ஏதேனும் உள்ளதா என்று எஸ்பிஐயிடம் கேட்டு ட்வீட் செய்தார்.
தனது கணக்கை மூடுவதற்காக வங்கிக்குச் சென்றதாக கூறும், ஆஷிஷ் வங்கியின் பியூன் தனது உடையை பார்த்து, அது கண்ணியமான உடை அல்ல என கூறி அனுமதி மறுத்துள்ளார். மேலும் பேண்ட் அணிந்து வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷிஷ் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
ஆடைக் கட்டுப்பாடு இல்லை
அவரது ட்வீட் அனைவர் கவனத்தையும் ஈர்த்த நிலையில், ஆஷிஷின் ட்வீட்டிற்கு பதிலளித்த SBI, “உங்கள் பிரச்சனையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மதிக்கிறோம்.எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஆடைக் கட்டுப்பாடு இல்லை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.
அவர்கள் தங்கள் விருப்பப்படி உடை அணியலாம் மற்றும் வங்கிக் கிளை போன்ற பொது இடங்களுக்கு உள்ளூரில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிமுறைகள்/பாரம்பரியம்/கலாச்சாரத்தை கருத்தில் கொள்ளலாம். இந்தச் சிக்கலை நீங்கள் எதிர்கொண்ட கிளைக் குறியீடு/ பெயரைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
வங்கி விளக்கம் (Bank Description)
ஆஷிஷ் பின்னர் விவரங்களுடன் ட்வீட் பதிவிட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்து சமாதானம் செய்தனர்.
இதையடுத்து அஷிஷ் தனது புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!