News

Monday, 13 May 2019 02:42 PM

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றும் , நாளையும்  (மே 13, 14) ஆகிய தேதிகளில் தமிழகம் உட்பட புதுவை மாநிலங்களில், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த மே 4 ஆம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பச்சலனம் ஏற்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.காற்றின் வேகமானது மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ என்ற அளவில் இருக்கும்.

சென்னை பெரும்பாலும் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது  39 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக ஆகவும் இருக்கும்.

நேற்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோத்தகிரி,ஊட்டி, சூளகிரி, கேத்தி, நடுவட்டம், தளி,   சேரன்மாதேவி, பேச்சிப்பாறை , பெரியநாயக்கன்பாளையம், கூடலூர்  ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 7 செ.மீ மழையும், தளி, கேத்தி, நடுவட்டம், சூளகிரி பகுதிகளில் குறைந்தபட்சமாக 1  செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)