தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவுறுதித்தி உள்ளது.
ஆந்திரவின் ராயல் சீமா முதல் தமிழகத்தில் குமரி வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக இன்னும் மூன்று தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
உள் மாவட்டங்களான திருவள்ளூர் முதல் தேனி வரையிலான பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த இரு தினங்களாக 40 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை சற்று குறைத்து அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என முன்னரே அறிவித்திருந்தனர். அதன்படி கேரளா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 5ஆம் தேதிக்கு பிறகு ஆரம்பிக்க உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran