மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2019 10:52 AM IST

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவக் காற்று சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென் ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும். குறிப்பாக வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், இதனால்   கடலுக்கு செல்லும் போது 400 கி.மீ தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Weather forecast: Light to moderate rain to occur at Tamil Nadu and Puducherry
Published on: 02 September 2019, 10:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now