கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. தமிழகம் மற்றும் புதுவையில் வெயில் சதத்தை தொட்டது. எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்த மாதம் தொடங்கிய அக்னி வெயிலானது இன்னும் நீடிக்கிறது. தமிழகத்தின் இன்றும், நாளையும் இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கிட பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை சற்று அதிகமாக இருந்த போதிலும் பெய்யவிருக்கும் கோடை மழை சற்றே ஆறுதல் எனலாம்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். வட மாவட்டங்களின் உட்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், காற்றின் வேகமானது 40-50 கி.மீ. வரை இருக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மேகமூட்டம் காணப்படும். குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியல் ஆகவும் , அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் காணப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Anitha Jegadeesan