News

Saturday, 25 May 2019 12:17 PM

தமிழகம் மற்றும்  புதுவையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீச கூடும். தென்மேற்கு பருவமழை  தாமதமாவதால் வெயில் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இன்னும் இரு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், கடும் அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கமானது தென் மாவட்டங்களை விட, வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலுார், திருத்தணி உள்பட 11 மாவட்டங்களில் மிக அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. பெரும்பாலான வட மாவட்டங்களில் வெயிலானது சதத்தை நெருங்கி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பநிலையானது அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி ஆக இருக்கும் என கூறியுள்ளது. நாளை 41 டிகிரியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

கடற்கரையோர   மாவட்டங்களில் இந்த அனல் காற்றின் தாக்கம் அதிகமாக  இருக்கும் எனவும்,  குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை  தவிர்க்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)