
தென்மேற்கு பருவ காற்றின் சாதகப்போக்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்றும் மிதமான மழையும் பெய்தது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக வெப்பம் சுட்டெரித்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது. கடந்த புதன் கிழமை மாலை திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் வறண்ட வானிலையே நிலவியது. இதைத்தொடர்ந்து நேற்று திடீரென சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை சுமார் முப்பது நிமிடம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்த மக்கள் நல்ல மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் அடுத்த சில தினங்கள் சென்னையில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம் இருப்பினும் இன்று வறண்ட வானிலை அல்லது லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்ஸியஸ் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran