தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும், அந்தந்த பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில், ரெட் அலர்ட், யெல்லோ அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் (Red Alert) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கிரீன் அலர்ட் (Green Alert)
லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும் போது கிரீன் அலர்ட் விடப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதற்கு அர்த்தம்.
யெல்லோ அலர்ட் (Yellow Alert)
இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் போது பலத்த மழை பெய்ய வாய்ப்பு. அடுத்த சில நாட்களுக்கு வானிலை மோசமாக இருக்கும். சூழ்நிலை குறித்து அதிகாரிகள் தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆரஞ்ச் அலர்ட் (Orange Alert)
பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு மோசமாக இருந்தால் ஆரஞ்ச் அலர்ட். பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுவர்.
ரெட் அலர்ட் (Red Alert)
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவில் இருந்தால் ரெட் அலர்ட் விடப்படும். 200 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகும். போக்குவரத்து, மின்சாரம், இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும்.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!