கோவிட் காரணமாக, இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் வேலை செய்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் வீட்டில் இருந்து வேலை மற்றும் வீட்டில் இருந்து படிக்கும் நிலைக்கு திரும்புயுள்ளது. எனவே தேவை அதிகரிக்கும் போது, செலவில்லா திட்டத்தை நோக்கி நம் பார்வை நகர்கிறது. அந்த வகையில் வோடஃபோன்-இன், இந்த அறிவிப்பு, நமக்கு நன்மை பயக்கும்.
தற்போது, செமஸ்டர் தேர்வுகள் கூட ஆன்லைனில் நடக்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அவ்வாறு இருக்க, வீட்டிலிருந்து படிப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடங்கும் போது, பயனர்களிடையே தரவுக்கான தேவை அதிகரிக்கிறது. அதிலும் அதிக டேட்டா நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்களின் மீதே, மக்களின் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது.
அதன்படி வோடபோன் ஐடியா (Vodafone Idea) அதாவது விஐயின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களின் (Vi Broadband plans) விருப்பங்களை இன்று நீங்கள இந்த பதிவில் பார்க்கலாம். அதன் முழு விவரம் கீழே படிக்கவும்.
Vodafone Idea பிராட்பேண்ட் திட்டங்களின் விவரம் (Details of Vodafone Idea Broadband Plans)
வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் ஆன்லைனில் பாடம் படிக்கும், இந்த காலகட்டத்தில், அனைவருக்கும் அதிவேக இணையம் தேவைப்படுகிறது, இது மொபைல் டேட்டாவை விட ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பூர்த்தி செய்ய முடியும். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான Vi, அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான You Broadband மூலம் அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி உள்ளது. You பிராட்பேண்டின் இரண்டு அற்புதமான பிராட்பேண்ட் திட்ட விருப்பங்களைப் பற்றி பார்க்கலாம்
200Mbps ஸ்பீட்-க்கான, Vi இன் திட்டம்
Vi இன் இந்தத் திட்டத்தில், 200Mbps டேட்டா வேகத்தின்படி பயனர் ஒவ்வொரு மாதமும் 3.5TB இணையத்தைப் பெறுகிறார்கள். மேலும், பயனர் நிறுவனத்திடமிருந்து மோடம் மற்றும் ரூட்டரைப் பெற விரும்பினால், ஒரு முறை பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1,999 செலுத்தி வாங்கலாம். இந்த வைப்புத் தொகை திரும்பப் பெறப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த திட்டத்திற்கு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1,062 ரூபாய் செலுத்தினால் போதும், இதில் ஏற்கனவே ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
100Mbps ஸ்பீட்-க்கான, Vi இன் திட்டம்
மாதத்திற்கு ரூ. 826 விலையுள்ள இந்த திட்டத்தில், மொத்தமாக ஒவ்வொரு மாதமும் 3.5ஜிபி டேட்டாவைப் கிடைக்கும். பயனர் நிறுவனத்திடம் இருந்து மோடம் மற்றும் ரூட்டரைப் பெற விரும்பினால், ரூ.1,999 ஒரு முறை பாதுகாப்பு வைப்புத் தொகையைச் செலுத்து வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இந்த வைப்புத் தொகை திரும்பப் பெறப்படும் எனவும், இந்த திட்டத்தின் விலையில் ஜிஎஸ்டி ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
சென்னை மெட்ரோவை 118.9 கிமீ விரிவுப்படுத்த ரூ. 63,000 கோடி ஒதுக்கீடு! மேலும் பல அறிவிப்புகள்!
Steel Authority of India Limited-ல் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு! நேர்காணலுக்கு அழைப்பு!