வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 November, 2022 7:40 PM IST
Disadvantage Of Rice

நம்மில் பலருக்கும் வெறும் அரிசியை மட்டும் வாயில் போட்டு மெல்லும் இருக்கும். இது தவறான பழக்கமா அல்லது சரியானதா என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அடிக்கடி வெறும் அரிசியை மென்று தின்பது பல தீமைகளை உருவாக்கும் என கூறப்படுகிறது. அடிக்கடி அரிசியை சாப்பிட்டால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இப்போது காண்போம்.

வெறும் அரிசியை சாப்பிடும் பழக்கம்

வேக வைக்காத வெறும் அரிசியை உண்ணும் பொழுது, அது விரைவாக செரிமானம் அடையாது. இதனால், அஜீரண கோளாறு ஏற்படும். ஏனென்றால், பிற தானியங்கள் மற்றும் காய்கறிகளை போல் அல்லாமல் அரிசியில் செல்லுலோஸ் எனும் பொருள் உள்ளது. பேசில்லஸ் சீரஸ் எனும் பாக்டீரியாவால் அரிசி சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா நம் உடலினுள் செல்லும் பொழுது, உடலின் உள்ளிருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு

அரிசியில் இருக்கும் லெசித்தின் எனும் பூச்சிக் கொல்லி, நம் உடலுக்குள் செல்லும் பொழுது, செரிமான செல்களை அழித்து விடுகிறது. மேலும், இந்த பூச்சிக் கொல்லி அதிகளவில் உடலில் சேர்ந்தால், குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பது அதிர்ச்சியூட்டும் மற்றொரு உண்மை.

பற்கள் பாதிப்படையும்

அரிசியை வெறுமனே உண்பதன் மூலமாக நம்முடைய பற்களில் கூட, பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. அரிசியில் அதிகளவில் மாவுப்பொருள் இருக்கிறது. இந்த மாவுப்பொருள், நம்முடைய பற்களில் உள்ள கிருமிகளுக்கு உணவாக மாறி விடுகிறது. பற்களில் உள்ள கிருமிகள், இந்த மாவுப் பொருளை நன்றாக உண்டு, பற்கள் இடையே தங்கி பல்லில் சொத்தையை ஏற்படுத்தும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணிப் பெண்களே உஷார்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பலருக்கும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது இயல்பு தான். அச்சமயத்தில் பெண்கள் வெறும் அரிசியை சாப்பிடும் பழக்கத்தை கூட வைத்திருப்பார்கள். ஆனால், இது மிக மிக பெரும் தவறு. கர்ப்பிணிப் பெண்களுக்கு வரக்கூடிய இரத்தசோகை, வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கட்டாயம் பாதிக்கும் என்பதை, கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, விவரம்!

ஆவின் பால் விலை உயர்வால் மக்கள் அவதி, ஏன்?

English Summary: What are the disadvantages of eating rice?
Published on: 05 November 2022, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now