விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க திட்டமான PM Kisan FPO அமைப்பதற்கான தகுதிகள், விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் குறித்து இப்பகுதியில் காணலாம்.
PM Kisan FPO திட்டம்:
இத்திட்டத்தின் கீழ், 11 விவசாயிகள் கொண்ட குழுவிற்கு, அதாவது உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு, விவசாயம் தொடர்பான தொழில் தொடங்க, அரசு 15 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
இத்திட்டமானது விளைப்பொருட்களை சந்தைப்படுத்துவதே எளிதாக்குகிறது. மேலும் உரங்கள், விதைகள், மருந்துகள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் முறையும் விவசாயிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.
PM Kisan FPO அமைப்பதற்கான தகுதிகள் என்ன?
- விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- ஒரு FPO- சமவெளிப் பகுதியில் குறைந்தது 300 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- மலைப்பாங்கான பகுதியில் குறைந்தது 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- FPO-க்கு அதன் சொந்த சாகுபடி நிலம் இருப்பது கட்டாயமாகும், மேலும் குழுவில் ஒரு பகுதியாக இருப்பதும் கட்டாயமாகும்.
விண்ணப்பிக்க தேவைப்படும் முக்கியமான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- முகவரி ஆதாரம்
- நில ஆவணங்கள்
- ரேஷன் கார்டு
- தன்னிலை சான்றிதழ் (I certificate)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- வங்கி கணக்கு அறிக்கை
- கைபேசி எண்
PM Kisan FPO திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் செயல்முறை:
- முதலில் நீங்கள் தேசிய வேளாண் சந்தையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் (https://www.enam.gov.in )
- இப்போது முகப்புப் பக்கம் உங்கள் முன் திறக்கும்.
- முகப்பு பக்கத்தில், நீங்கள் FPO என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் பதிவு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது PM Kisan FPO யோஜனா படிவம் உங்கள் முன் திறக்கும்.
படிவத்தில் கேட்கப்படும் தகவல்கள்:
- பதிவு வகை
- பதிவு நிலை
- முழு பெயர்
- பாலினம்
- முகவரி
- பிறந்த தேதி
- அஞ்சல் குறியீடு
- மாவட்டம்
- புகைப்பட ஐடி வகை
- கைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- நிறுவனத்தின் பெயர்
- எந்த மாநிலம்
- எந்த தாலுகா
- புகைப்பட ஐடி எண்
- மாற்று மொபைல் எண்
- உரிமம் எண்
- நிறுவனத்தின் பதிவு
- வங்கி பெயர்
- கணக்கு வைத்திருப்பவரின் பெயர்
- வங்கி கணக்கு எண்
- IFSC குறியீடு
இதற்குப் பிறகு, நீங்கள் பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இப்போது நீங்கள் சமர்ப்பிக்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இந்த வழி முறைகளை பின்பற்றி நீங்கள் FPO திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் காண்க: