மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்ல முறையில் தீர்வளிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில், மலச்சிக்கல் பாதிப்பு, "விபந்தா" என்று அழைக்கப்படுகிறது. குடல்களின் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களில் சுணக்கம், திடமான அதேசமயம் கடினமான மலம், மலம் கழித்தலின் போது அதீத வலி, வீக்கம், வயிற்று உபாதைகளால் அசவுகரியம், நிறைவு பெறாத நீக்கம் போன்றவைகள் மலச்சிக்கலின் அறிகுறிகளாக உள்ளன.
கழிவுகளை சுத்தம் செய்ய
நமது உடலின் கழிவுகளை சுத்தம் செய்ய வாத தோஷம் முக்கிய பங்காற்றுகிறது. இதில் மலச்சிக்கல் பாதிப்புக்கு வாதம் முக்கிய காரணமாக அமைகிறது. வாத தோஷத்தினால் மலத்தை வெளியேற்றாமல் பிடித்துக்கொள்வது மட்டுமல்லாது, மலம் வெளியேற நேரம் வந்த போதிலும் அதை இலகுவாக வெளியேறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. அதன் செயல்பாடு பாதிக்கப்படும் போது, மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் முற்றுவதற்கு முன்னரே, நாம் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால், அதீத பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கல் பாதிப்பிற்கு காரணமான உணவுகள்
உலர்ந்த மற்றும் கடினமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் நீர்ச்சத்து குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுவதோடு, உடலின் கடினத்தன்மையையும் அதிகரிக்க செய்து விடுகிறது.
-
அதிக காரம், உப்பு கொண்ட மற்றும் மூச்சு திணறல் ஏற்படுத்தவல்ல உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுதல்.
-
குறைந்த அளவில் நீர் அருந்துதல்
-
இரவில் அதிக நேரம் முழித்தல்
-
வெயிலில் நீண்டநேரம் இருத்தல்
-
நீண்ட நடை, அதிகளவில் பயணங்களை மேற்கொள்ளுதல்
-
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல்.
மலச்சிக்கலை தடுக்கும் நடவடிக்கைகள்
-
அதிகளவில் நீர் அருந்துதல் (குறிப்பு : வெறும் வயிற்றில் அதிகளவில் நீர் அருந்தக் கூடாது)
-
உடற்பயிற்சிகளை தவறாது மேற்கொள்ள வேண்டும்
-
காபி, டீ, புகைப்பழக்கம் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்
-
மீன் உடன் பால், பால் உடன் புளிப்பு சுவை உணவுகள் என உடலுக்கு தீங்கு தரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
-
உப்பு கலந்த பால், கொள்ளு, பாசிப்பருப்பு, பழங்களை சாப்பிட்ட உடன் பால் அருந்துதல் உள்ளிட்டவைகள், நமது உடலுக்கு பொருந்தாத உணவு வகைகள் ஆகும்.
-
எள் எண்ணெயில் கோதுமையினால் ஆன உணவு வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
-
மது வகைகளை அருந்தியபின் சூடான பானங்களை குடித்தல், தயிர் அல்லது தேனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுதல் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
-
சூடான மற்றும் குளிர்ந்த உணவு வகைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுதல், அசைவ உணவு வகைகளை தயிர் சேர்த்து சாப்பிடுதல் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
-
முள்ளங்கியை வெல்லம் சேர்த்து சாப்பிடுதல், வெண்கல பாத்திரத்தில் வைக்கப்பட்ட நெய் போன்றவைகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் பாதிப்பிற்கான தீர்வுகள்
ஆயுர்வேத மருத்துவத்தில், மலச்சிக்கல் பாதிப்பிற்கான முதல் சிகிச்சையாக, நிதன் பரிவர்த்தனா அல்லது உணவுமுறை மற்றும் விஹாரில் போதிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உணவுமுறையே சிறந்த மருத்துவம் ஆகும். உணவுமுறை தவறாக இருப்பின், நாம் எத்தகைய மருந்துகளை உட்கொண்டாலும், அதனால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் ஆரோக்கியமான அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது, நமக்கு எவ்வித மருந்துகளும் தேவை இல்லை என்பதை நாம் எந்த தருணத்திலும் மறந்துவிடக் கூடாது.
சரியான உணவுகளை உட்கொள்ளுதல்
டிவி பார்க்கும் போதோ, மற்றவர்களுடன் உரையாடும் போது, புத்தகங்களை படிக்கும்போதோ, எதையும் சாப்பிடக் கூடாது. அதிக தாகம் இருக்கும் சமயத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. அதேபோல், பசியோடு இருக்கும் நேரத்தில், தண்ணீர் குடிக்கக் கூடாது. மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது உணவுக்கு பின்போ, பழங்களை சாப்பிடக் கூடாது. பசி இல்லாத நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது.
பசி ஏற்பட்டால் மட்டுமே, நாம் சாப்பிட வேண்டும். மதிய உணவு, நண்பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிட வேண்டும். இந்த நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே, செரிமானம் சிறப்பாக நடைபெறும். மதிய உணவு எப்போதுமே பெரிய அளவில் இருத்தல் வேண்டும். இரவு உணவு, மதிய உணவில் பாதியளவே இருக்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.
மேலும் படிக்க..
சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர ஐந்து சத்தான உணவுகள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!