பிரதமர் மோடியின் செய்ல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு ஆளும் அரசுக்கு சற்று சருக்கலாக உள்ளன.
அண்மையில் சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் நடத்திய இரு கருத்துக் கணிப்புகளில், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பட்டால் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 74% பேர் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே மிகக்குறைந்த அளவு அதாவது வெறும் 2.2% வாக்காளர்கள் மட்டுமே மோடியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவா வாக்காளர்கள் அதிகபட்சமாக திருப்தியும், கேரள,புதுச்சேரி, தமிழ்நாடு வாக்காளர்கள் குறைந்தபட்சமாக திருப்தியும், உள்ளதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, அசாம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 50% குறைவான மக்கள் திருப்தியும், மனநிறைவும் இருப்பதாக கூறியுள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் முடிவுகள் பின்வருமாறு
ஜார்கண்ட் 74%
ராஜஸ்தான் 66.3%
கோவா 66.3%
ஹரியாணா 65.9%
மகாராஷ்டிரா 47.9%
அசாம் 47%
உத்தரப்பிரதேசம் 43.9%
மேற்கு வங்கம் 43.2%
ஜம்மு காஷ்மீர் 39.6%
ஆந்திரா 23.6%
பஞ்சாப் 12%
புதுச்சேரி 10.7
கேரள 7.7%
தமிழ்நாடு 2.2%