சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதன் மானியம் வருகிறதா, இல்லையா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு வந்த பிறகு அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் அரசு தரப்பிலிருந்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நிறையப் பேருக்கு சமையல் சிலிண்டர் மானியம் வருகிறதா, இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. சமையல் சிலிண்டர் மானியம் குறித்து ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் சமையல் சிலிண்டர் மானியம் அதிகரிக்கவில்லை. ஆனால், விலையேற்றம் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட மானியம் ரத்துசெய்யப்பட்டது போன்ற சூழலே நிலவுகிறது. 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் பொதுமக்களுக்கு சிலிண்டர் மானியம் அரசு தரப்பிலிருந்து மொத்தம் ரூ.16,461 கோடி வழங்கப்பட்டது. ஆனால் 2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.1,233 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதிலிருந்து மானியத் தொகை எந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெறிகிறது.
மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டரின் விலையும் கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் மானிய உதவி கிடைத்ததாக தெரியவில்லை. பலர் தங்களுக்கு மானிய உதவி நிறுத்தப்பட்டுவிட்டதாகவே நினைத்திருப்பார்கள். சிலிண்டர் விலையைப் பொறுத்தவரையில், 2020 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரையில் சிலிண்டர் விலை 225 ரூபாய் உயர்த்தப்பட்டது. 2020 பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.858 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 2020 மே மாதத்தில் இதன் விலை ரூ.582 ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் ரூ.594 ஆக மீண்டும் உயர்த்தப்பட்டது.
மேலும் படிக்க:
Ujjawala Yojana: இலவச LPG சிலிண்டர் பெறுவது எப்படி?
LPG Cylinder மானியம் யாருக்கு கிடைக்கும்? அரசின் புதிய விளக்கம்