திருச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, “ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும்.
மேலும் வரும் 26ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் வரும் 28ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
மேலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சேலம், திருச்சி, ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கறவைமாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
மேலும் படிக்க: