ஒமைக்ரான் வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் 2-வது டோஸ் தடுப்பூசிக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரான் வைரஸ் (Omicron virus)
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. ஒன்று என கணக்கைத் தொடங்கிய ஒமைக்ரான் தற்போது 400-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Booster dose vaccine)
இந்நிலையில் தடுப்பூசிகள் மூலம் மனிதர்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் மீறும் அளவில் ஒமைக்ரான் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றார்கள். இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Booster dose vaccine) அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார். முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.
2-டோஸ் தடுப்பூசி செலுத்தியபின் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் 9 முதல் 12 மாத இடைவெளி தேவைப்படும் என்று கூறப்படுகிறது எனத் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
இந்தியாவில் ஓமைக்ரான் அதிகரித்தாலும் மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும்!
பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!