News

Monday, 05 October 2020 03:22 PM , by: Elavarse Sivakumar

தேங்காய் மற்றும் கொப்பரைக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) கணித்துள்ளது.

TNAU கணிப்பு

இந்திய தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 28 சதவீதத்துடன் மூன்றாமிடம் வகிக்கிறது. இதில் கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி வேலூர், தேனி, மற்றும் திருநெல்வேலி ஆகியவை தேங்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
வர்த்தக மூலங்களின் படி, கடந்த பருவத்தைக் காட்டிலும் இந்த பருவத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தேங்காய் உற்பத்திக் குறைந்துள்ளது. ஆனால் தேவை நிலையாக உள்ளது.

எனவே ஜனவரி முதல் பிப்ரவரி 2021-இல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தேங்காய் கொப்பரை வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் நல்ல பருவமழையினால் எதிர்வரும் பருவத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இச்சூழலில் விவசாயிகளின் விற்பனை முடிவு எடுக்க ஏதுவாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை விலையை ஆய்வு செய்தது.

ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த ஆண்டு, அக்டோபர், டிசம்பர் மாதங்கள் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.15 முதல் ரூ. 17 வரையும், நல்ல தரமான கொப்பரை கிலோவிற்கு ரூ100 முதல் ரூ.110வரையும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கர்நாடகா மற்றும் வரும் கேரள மாநிலங்களின் வரத்தைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் விரங்ளுக்கு, 

உள்நாட்டு ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி - 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு 

பேராசிரியர் மற்றும் தலைவர்.

வாசனை மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி எண் - 04226611284

மேலும் படிக்க....

ஒருங்கிணைந்த களை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி- TNAU ஏற்பாடு!

வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!

மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)