பஞ்சாபில் சாதகமற்ற காலநிலைக்கு பிறகும் 120 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 96.47 லட்சம் மெட்ரிக் டன்னை விட கொள்முதல் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொள்முதலைக் காட்டிலும் நடப்பு குளிர்காலப் பயிர்கள் சந்தைப்படுத்தல் பருவத்திற்கான கோதுமை கொள்முதல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை மற்றும் சீரற்ற காலநிலைக்குப் பிறகும் இந்த ரபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் 120 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொள்முதல் ஆண்டில் பஞ்சாப் கிட்டத்தட்ட 120 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வாங்கும். மோகா, பாட்டியாலா, முக்த்சார் மற்றும் ஃபாசில்கா உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான ஆலங்கட்டி மழையுடன் கூடிய பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டன. இருப்பினும் சீரற்ற காலநிலையால் 34.90 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது.
இருப்பினும், பயிர் வெட்டும் பரிசோதனையின் போது ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 47.24 குவிண்டால்கள் இருப்பதை மாநில வேளாண்மைத் துறை கண்டறிந்துள்ளது. பயிர் வெட்டும் பரிசோதனையின் முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தி 160-165 லட்சம் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று வேளாண் துறை எதிர்பார்க்கிறது.
கூடுதலாக, பஞ்சாப் விவசாயத் துறையின் மூத்த அதிகாரியுடன் உரையாடியபோது, ஒரு ஏக்கருக்கு 19 குவிண்டால் விளைச்சல் பஞ்சாபின் சராசரி என்று கூறப்படுகிறது. எனவே, எதிர்பாராத மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் விளைச்சல் இழப்பு நாம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என கருதுகிறோம் என்றார்.
2022 ஆம் ஆண்டில், மாநிலம் ஒரு ஹெக்டேருக்கு 44 குவிண்டால்களும், 2021 இல் ஹெக்டேருக்கு 48 குவிண்டால்களும் கோதுமையினை விளைவித்துள்ளது. விவசாயிகள் முன்னதாகவே பாதிப்படைந்த தானியங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக விளைச்சல் பாதிப்பு குறித்து புகார் அளித்தனர் மற்றும் கொள்முதலுக்கான ஒன்றிய அரசின் விதிமுறைகளை தளர்த்துமாறு பஞ்சாப் அரசை நாடினர். விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மாநில அரசும் செவி சாய்த்தது.
மேலும், மாநில அரசு பயிர் இழப்புக்கு 25 சதவீதம் இழப்பீடு வழங்கியது. இந்த பருவத்தில் விவசாயிகளால் 65 சதவீத கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, மண்டிகளில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை பெறப்படுகிறது.
மேலும் காண்க:
வேளாண் பட்ஜெட்- வெறும் வாயில் சுட்ட வடையா? கொதித்தெழுந்த அமைச்சர்