தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்காகப் பள்ளிகளை விரைவில் திறக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழித் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல் (Closing of schools)
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டப் பள்ளிகள், தற்போது வரைத் திறக்கப்படவில்லை.
நோய் தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப் 1ம் தேதி முதல் (Starting Sept 1)
கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே கீழ் வகுப்புகளையும் இயக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.
அமைச்சர் தகவல் (Minister Information
திருச்சியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில்,
9 முதல் 12 வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன. முதல் 8 நாட்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது, வருகை பதிவேடு எப்படி இருக்கிறது, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து கண்காணிக்க திட்டமிட்டு அதை கண்காணித்து வருகிறோம்.
செப் 8ம் தேதிக்கு பிறகு (After Sept. 8)
தொடக்க பள்ளி என்பது மிகவும் முக்கியமானது. கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவெடுக்கலாம் என்பதை 8-ம் தேதிக்கு பின்பு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
மாணவர்களுக்குப் பரவலாக ஏதாவது ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து கொரோனா பரிசோதனை செய்ய முன்வந்தோம். அப்படி செய்ததில் நாமக்கல் மாவட்டத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு உறுதி (Ensure security)
இது போன்று என்ன என்ன பிரச்சனைகள் எட்டு நாட்களில் வருகிறது என்பதையும் கண்காணித்து வருகிறோம். நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வழிவகை செய்யப்படும். தூய்மை பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை விரைவில் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் நேரம் (Extra time)
பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பள்ளிகளை இயக்குகின்றன.
அவ்வாறு செய்வதில் தவறில்லை.மொத்தமாக 8 மணி நேரம் பள்ளிகள் இயங்குகிறது.
மாணவர்கள் தாமதமாக வந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கக்கூடாது. பள்ளிகளுக்கு வராமல் இருந்த மாணவர்கள் முதலில் பள்ளிகளுக்கு வர விடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...