தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து ரேஷன் அட்டைதார்களும், அவர்களின் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கி செல்வர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவுத்துறை தொடர்ந்து பல முன்னேற்றங்களை சந்தித்து வருவதாகவும், 1.60 கோடி ரேஷன் அட்டைதார்கள், கூட்டுறவுத்துறையின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயனடைக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: