News

Wednesday, 14 December 2022 07:38 PM , by: T. Vigneshwaran

Subsidy For Farmer

பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 13-வது தவணையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் மற்றும் 600 வேளாண் வளர்ச்சி மையங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் `கிசான் சம்மான் சம்மேளன் 2022' மாநாட்டை பிரதமர் நேற்று தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 13,500 விவசாயிகளும், 1,500 வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு கோடி விவசாயிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். மாநாட்டில், வேளாண் கண்காட்சி அரங்கையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: `பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா' என்ற பெயரில் நாடு முழுவதும் 600 வேளாண் வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உரம் விற்பனை செய்யப்படும்.

பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.16,000 கோடி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரும் பணத்தைப் பறிக்க முடியாது. தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் படிக்க:

7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ.95680 கிடைக்கும்

ஆடு வளர்ப்பு: பால் மற்றும் இறைச்சிக்கு சிறந்த ஆடு இனங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)