90% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் கோவிட் எனப்படும் கொரோனாத் தொற்று முடிவடையும் எனத் தொற்று நோயியல் நிபுணர்கள் கூறியுள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.
கட்டுக்குள் இல்லை (Not under control)
2019-ல் உருவான கோவிட் வைரஸின் ஆல்பா வகையை விட தற்போது உலகளவில் பரவி வரும் டெல்டா வகை 60% அதிகம் பரவக்கூடியதாக உள்ளது.
2 மடங்கு அதிகம் தொற்று பாதிப்பை உண்டாக்குகிறது. தடுப்பூசிக்கும் இவ்வகை வைரஸ்கள் முழுமையாக கட்டுப்படுவதில்லை.
அமெரிக்க அரசின் தகவல் படி, டெல்டா வகை வைரஸிடமிருந்து பாதுகாப்பதில் பைசர் மற்றும் மார்டனா தடுப்பூசிகளின் திறன் 91 சதவீதத்திலிருந்து 66 சதவீதமாக குறைந்துள்ளன. மேலும் சில ஆய்வுகள், தடுப்பூசிகளின் செயல்திறன் காலப்போக்கில் டெல்டா வகைக்கு எதிராக வீழ்ச்சியடைவதைக் காட்டுகிறது.
ஹெர்ட் இம்யூனிட்டி (Hert Immunity)
ஹெர்ட் இம்யூனிட்டியை மக்கள் தொகை எதிர்ப்பு திறன் என்கின்றனர். வைரஸ் பாதிப்பதாலோ அல்லது வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி போடுவதாலோ உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும். அவர்கள் நோய்க்கிருமியைப் பெறாமலும், பரவாமலும் தடுக்கிறார்கள்.
இதன் மூலம் நோய் பரவும் சங்கிலி உடைப்பட்டு ஒரு கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் வைரஸிடமிருந்து பாதுகாப்பை பெறுவார்கள்.
இதனை தான் ஹெர்ட் இம்யூனிட்டி அல்லது மக்கள்தொகை எதிர்ப்பாற்றல் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய டெல்டா வகையால் இந்த பாதுகாப்பை மக்கள் பெறுவது சந்தேகம் என்கின்றனர் நிபுணர்கள்.
90% தடுப்பூசி (90% vaccinated)
இது பற்றி ஆண்டனி ப்ளாஹால்ட் என்ற தொற்றுநோயியல் நிபுணர் ஏ.எப்.பி., கூறுகையில், மக்களை வைரஸ் பாதிக்கும் போது மக்கள்தொகை எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கோவிட் அசல் வைரஸை பொறுத்தவரை, அதன் இனப்பெருக்க விகிதம் பூஜ்ஜியம் முதல் 3 ஆக இருந்தது.
அதாவது தொற்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், மற்ற மூவருக்கு அதைக் கடத்துவர். அந்நிலையில் 66% மக்களுக்கு தடுப்பூசி போட்டால் மக்கள்தொகை நோய் எதிர்ப்புசக்தியை அடைய முடியும். ஆனால் டெல்டா வகையில் இனப்பெருக்க விகிதம் 8 ஆக உள்ளது. அதனால் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ளார்.
என்று முடியும்? (Is that possible?)
மக்கள்தொகை நோய் எதிர்ப்பாற்றல் தற்போதைய சூழலில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. எனவே தடுப்பூசி மூலம் எவ்வளவு பேரை பாதுகாக்க முடியுமோ அவ்வளவு பேரைப் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.
இறுதியில், நிச்சயமாக, அனைத்து தொற்றுநோய்களும் முடிவடையும் என நம்பிக்கை அளிக்கின்றனர். தடுப்பூசி போட்டிருந்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க...
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!