ஆந்திரக்கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அப்படியே நீடிப்பதால், தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை (Heavy Rain)
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிடட்டுள்ள அறிக்கையில், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளள்ளது.
இலேசான மழை (Rain)
அதேநேரத்தில், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை முன்அறிவிப்பு (Weather forecast)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் இலேசான மழைபெய்யக்கூடும்.
வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டியே இருக்கும்.
அதிகளவு மழை (Maximum Rain)
அதிகபட்சமாக திருத்தணியில் 9 சென்டிமீட்டரும், கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லார், திருப்பத்தூரில் தலா 7 சென்டிமீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை(Fishermen Warning)
-
கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில், இன்று பலத்தக் காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
-
வரும் 18ம் தேதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில், பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு
விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவது இனி ரொம்ப ஈஸி- விபரம் உள்ளே!