கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு இணையம் இன்று உத்தரவிட்டு செய்தி குறிப்பு வெளியிட்டடிருந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “ பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தி விலையை ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
இதில், “ எருமைப்பால் 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் பயன்படுத்த படக்கூடிய ஆரஞ்சு கலர் ஃபுல் க்ரீம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதே விலையே தொடரும், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனல் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ தனியார் பாலை காட்டிலும் குறைவாகவே ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது. கண்டிப்பாக நீல நிறம், பச்சை நிறம் பால் விலையை உயர்த்த வாய்ப்பு இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் 6 ரூபாய் பால் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் 3 ரூபாய் பால் விலை குறைத்ததால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: