மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 March, 2021 10:06 PM IST
Credit : Ugaoo

இயற்கை வேளாண்மை முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை முறையில், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு ரசாயனப் பொருட்கள் இவற்றை சந்தையிலிருந்து வாங்குவதற்கு அதிக முதலீடு (invest) செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை முறையில், அனைத்துப் பொருட்களும் ஒருவரது பண்ணையிலிருந்தே கிடைக்கப் பெறும். இந்த அமைப்பில், கிராமப்புறப் பகுதியிலுள்ள உள்நாட்டுக் கால்நடைகள் (livestock) வேளாண் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்தவைகளாக இருக்கின்றன. விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் சரியான வளர்ப்பு முறை பின்பற்றப் பட்டு விளையும் பயிர்களிலிருந்தே நல்ல தரமான விதைகளை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

இயற்கை வேளாண்மை முறையின் பயன்கள்

  • விவசாயச் செலவைக் குறைக்கின்றது.
  • உற்பத்தி மற்றும் லாபத்தை (profit) அதிகரிக்கின்றது.
  • நிலையான விவசாய வளர்ச்சியினை அடைய முடியும்.
  • மண்ணின் தரத்தைப் பாதுகாத்து, ரசாயன உரங்களின் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் நச்சுத் தன்மையை அகற்ற முடியும்.
  • ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுப் பயனடைவர்.
  • உற்பத்திப் பொருட்களின் நீண்ட ஆயுள், காய்கறி மற்றும் பழங்களின் சுவை, அதிகரிக்கும்.
  • நிலத்தடி நீர் (Ground water) தரம் பாதுகாக்கப் படும்.
  • பூச்சிக் கொல்லிகள் இன்மையால், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பூக்களை நோக்கி வரும். அதனால் அதிக மகரந்த சேர்க்கையும், அதிக உற்பத்தியும் ஏற்படும்.
  • இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் நீர் உரங்கள் மண்ணிலிருந்து சத்துக்கள் பயிர்களைச் சென்றடைவதற்கு உதவுவதுடன், மண்ணின் வளத்தையும் காக்கும்.

ரசாயன முறை வேளாண்மை

  • ரசாயன முறை வேளாண்மையில் விவசாயிகளை விலை மிகுந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றின் மீது சார்ந்திர்க்க வைக்கின்றது. இத்தகைய உரங்கள் (compost) மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப் பயன்பாடு நாளுக்கு நாள் விவசாயச் செலவை அதிகரிக்கின்றது.
  • உற்பத்தி அதிகரிப்பதில்லை, உண்மையில் அது குறையவே செய்கின்றது.
  • இலை தழை முதலியன மக்கிய தோட்ட மண் குறைந்து, ரசாயனப் பொருள் அதிகரிக்கின்றது. ஆகவே மண் செழிப்பற்றதாகின்றது.
  • உணவுத் தானியங்கள், கைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் பூச்சிக் கொல்லிகளின் மிச்சம் தங்கி, அது மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கின்றது.
  • மேற்ப்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் (Ground water) மாசுபடுகின்றன. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் அருந்தப் பாதுகாப்பற்றதாகி விடுகின்றது.
  • வேளாண்மை லாபமற்ற சிக்கலான தொழிலாகி, சிறிய விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பயிர்ப்பாதுகாப்பு

பூச்சிகள் (pest) மற்றும் நோய்கள் தாக்கும்போது அக்னியாஸ்த்ரம், பிரம்மாஸ்திரம், நீமாஸ்திரம், பூசனம் 1 பூசனம் 2 பூச்சிக்கொல்லி 1 பூச்சிக்கொல்லி 2, பூச்சிக்கொல்லி 3ஆகியவை பரிந்துரைக்கப் படுகின்றன. நோய்தடுப்பு அல்லது நோய்க் குணப் படுத்துதல் என்னும் முறையில், இந்த பூஞ்சைகளும் பூச்சிக் கொல்லிகளும் விவசாயியாலேயே தயாரிக்கப்படலாம்.

ஆதாரம் : ஸ்ரீ வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அறக்கட்டளை

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேக்கம்! விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!

English Summary: Why should we handle Organic Farming?
Published on: 16 March 2021, 10:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now