News

Monday, 08 April 2019 05:18 PM

ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர் கட்சியான திமுக இவ்விரண்டு கட்சியில் எந்த கட்சி 2019யில்  தமிழ் நாட்டை ஆளப்போகிறது?

அதிமுக இணைத்துள்ள கட்சிகள் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவை  ஊழல் ஆட்சி என்று கூறிய பாமகவும், தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத பாஜகவையும் , பாமக இணைந்தால் நாங்கள் இனிய மாட்டோம் என்று கூறிய , தேமுதிக கட்சிகள் மற்றும் சில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. 

திமுக  இணைத்துள்ள கட்சிகள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியம் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயகம், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

இதில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அதிமுகவுடன் பாமக, தேமுதிக மற்றும் பாஜக இணைத்துள்ளது. இரண்டாவது  விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் வைக்கோ திமுகவுடன் இணைந்துள்ளதும் தமிழ்நாட்டு  மக்களின் மனதில் நிறைய கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நம்பிக்கையை குறைத்துள்ளது. 

அதிமுக முன்னாள் தலைவி ஜே.ஜெயலலிதா அவர்கள் இறந்ததும் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரே கட்சியில் பிரிவுகள் உள்ளன.  மேலும் தலைவர் மாறிய நிலைமையில்  பெரும் குழப்பமும் பிரச்சனைகளும்  தமிழ் நாட்டின் நிலையை கேள்விக்குறியாக மாற்றியது. பிரச்சனைகள் பல உண்டாயினும் தமிழ்நாடு இன்றைய நிலை வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தை யார் ஆளப்போவது? மீண்டு தமிழகத்துக்கு நன்மை உண்டாகுமா?   மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பார்கள்! அல்லது திமுக மற்றும் அதிமுக இவ்விரண்டையும் நோட்டா வென்று விடுமா?

மக்களின் கருத்து என்ன! பகிருங்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)