News

Wednesday, 27 April 2022 10:58 AM , by: Ravi Raj

School Closed Again in Tamilnadu..

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டன.

தற்போது, பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறது.10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மே 13 கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.

வரும் நாட்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மூட பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க..

தமிழகத்தில் திறந்த வேகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் அடைப்பு?

ஜூலை 20 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)