தமிழகத்தில் 1வகுப்பு முதல் 8ம வகுப்பு வரையிலான துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து செப்.30ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல் (Closing of schools)
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டப் பள்ளிகள், தற்போது வரைத் திறக்கப்படவில்லை. நோய் தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப் 1ம் தேதி முதல் (Starting from Sept 1)
கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை பெரிய அளவில் தொற்றுப் பிரச்சனை வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே கீழ் வகுப்புகளையும் இயக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
முதல்வரிடம் அறிக்கை (Report to the CM)
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் கேரளாவை ஒட்டிஉள்ளன. கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதால் அங்குள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மாறுபட்டக் கருத்து (Dissenting opinion)
ஒரு சாரார் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்றும், ஒருசாரார் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
செப்.30ல் முடிவு (End on Sept. 30)
இருப்பினும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்.,30ம் தேதி முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...