ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருவதால், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ரத்தாகும் சூழ்நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது.
கொரோனா பாதிப்பு (Corona vulnerability)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்தப் பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. முதலில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகளையும் பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டது.
ஒமிக்ரான்
இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகளைப் பொறுத்தவரை பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு
முன்னதாக, கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் அதே நிலை ஏற்படுமோ என மாணவர்கள் நினைத்தநிலையில், இந்த ஆண்டு கண்டிப்பாகப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் எதிர்பார்ப்பு (Students expect)
ஆனால், தற்போது கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளாதால் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது கடந்த ஆண்டை போன்றே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமைச்சர் உறுதி
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தயவு செய்து இதை விடுமுறை என்று கருதாமல், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாகவும் தமிழக அரசு யூடியூபில் 8,000 வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளன.
அதனை பார்த்தும் தொடர்ந்து பாடங்களை படிக்க செய்ய வேண்டும்.”
இவ்வாறு அன்பில் மகேஷ் கூறினார். அமைச்சரின் இந்த பேட்டி மூலம் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிய வருகிறது.
மேலும் படிக்க...