தென்னீரா பானத்தை அரசு பானமாக அறிவிக்கவேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் மனு அளித்தனர். திருப்பூரில் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் நேரில் மனு அளித்தனர்.
தென்னீரா (Thenneera)
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். தென்னையிலிருந்து கிடைக்கும் 'நீரா' பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய 'நீரா' பானத்தை, 'தென்னீரா' என்ற பெயரில் விற்று வருகிறோம்.
கேரள மாநிலம், காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த 'தென்னீரா' பானத்தை, அரசு பானமாக அறிவித்து, முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.
ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். 'நீரா' பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நெல் கொள்முதல் சீசன்: விவசாயிகளுடன் இன்று ஆலோசனை!
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!