சென்னையில் ஒமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருவதால்,
புத்தாண்டு அன்று கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மின்னல் வேகம் (Lightning speed)
உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ், சென்னையில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஒரு நோயாளியிடம் இருந்து, மருத்துவர்கள் உள்ளிட்ட 94 பேருக்குகொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 64 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு, அவர்களது மாதிரிகள், பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.அதன் முடிவுகள் வர தாமதம் ஆகும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
194 பேர் (194 people)
அதேநேரத்தில் சென்னை மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வகை வைரஸை விட, மின்னல் வேகத்தில் ஒமிக்ரான் சமூக பரவலாக இருப்பதால், பொதுமக்கள், முக கவசம், சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இணை நோயாளிகள், முதியோர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
சேகர்பாபு தகவல் (Sekarbabu information)
இதனிடையே சென்னையில் துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிரகாசம் சாலை, அரசு பல்மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மற்றும் நடைபாதை பூங்கா ஆகியவற்றை தொகுதி சட்டசபை உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாகது:-
மழையால் வரும் காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில், மத்திய அரசு வழிகாட்டும் நடைமுறைகளை மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
விரைவில் முடிவு (Results soon)
இருப்பினும் வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க....