அவிநாசி விவாசகிகளின் மற்றுமொரு முயற்சி என்றே கூறலாம். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தென்னை ஓலைகளை பொடியாக்கி மீண்டும் தென்னைகளுக்கு உரமாக்குகின்றனர்.
அவிநாசி வட்டத்தில் பெரும்பாலானோர் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்களிலிருந்து விழும் தென்னை ஓலைகளை செய்வதறியாது கரையான்களுக்கு இறையாகின்றன, அல்லது நிறுவனங்களுக்கு எரிபொருளாக பயன்படுகின்றன. இதனால் விவாசிகள் வேளாண் துறையினரின் உதவியினை நாடி உள்ளனர்.
தென்னை ஓலைகளை சேகரித்து அதனை பிரத்தியேகமான டிராக்டர் மூலம் பொடி செய்ய படுகிறது. முதலில் ஒரு ஆழமான குழியினை தோண்டி இந்த தென்னை ஓலை பொடியினை போட வேண்டும். பின் அதன் மேல் சாண உரம் கொண்டு நிரப்பி மூடி விட வேண்டும். ஆறு மாதம் கழித்து இந்த உரம் தென்னை மரங்களுக்கே மீண்டும் உரமாகிவிடுகின்றன. ஒரு ஆராய்சி கூற்றின் படி, மரம் மற்றும் செடிகளில் இருந்து வெளிவரும் கழிவுகளை உரமாக்கி மீண்டும் அதே செடிகளுக்கு பயன்படுத்தும் போது நல்ல மகசூலை தருகிறது என்கிறார்கள்.
தென்னை ஓலை உரமாக்குவதினால், மரங்களின் அருகில் வளரும் களைகள் ஈர்க்க படுகிறது. விவாசகிகளின் உர செலவு சேமிக்க படுகிறது.ஓலைகளை எரிப்பதினால் ஏற்படும் புகை பெருமளவில் குறைகிறது. சுற்று சூழல் மாசு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.