News

Thursday, 25 April 2019 05:55 PM

கத்தார் தலைநகரம் தோஹாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மகளிர் 1500மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  பி.யூ சித்ரா முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளார். இவர் பந்தைய தூரத்தை 4நிமிடம் 14.46வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.

கேரள  மாநிலத்தை சேர்ந்த சித்ரா பாலக்காட்டை சேர்ந்தவர். குடும்பத்தின் வறுமையை தாங்கிக்கொண்டு தனது திறமையை இந்த உலகிற்க்கு காட்டியுள்ளார். தனது வாழ்வின் போராட்டத்திற்கிடையே  இத்தனை பயிற்சி மேற்கொண்டு தனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும்  பெருமை சேர்த்துள்ளார். மற்றும் 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற  ஆசிய தடகளப் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.

மேலும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, இந்த விளையாட்டு தொடரில் இந்திய 3தங்கம், 8வெள்ளி, 7வெண்கலம், என மொத்தம் 18பதக்கங்களை   வென்று 4 வது இடத்தை பிடித்துள்ளது. 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)