மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தும் விரைவில் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 5,758 பயனாளிகளுக்கு 29 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் நகைக்கடன் தள்ளுபடித் தொடர்பான ஆவணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி, கூடிய விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும் என்றார்.
இது தொடர்பானக் கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகளிரிடையேக் குறிப்பாக சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன்ற பெற மகளிருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தவிர, பல பகுதிகளில் மகளிர் சுய உதவி குழு கடன் மூலமாக பெறப்பட்ட அனைத்து விதமான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!