உலகிலேயே மிகப் பெரிய ஆற்று மீன், கம்போடியாவில் சிக்கியுள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள மிகாங் ஆற்றில், ஒரு மீனவரின் வலையில் 'ஸ்டிங்ரே' எனும் பிரமாண்டமான திருக்கை மீன் சிக்கியது.
ஆற்று மீன் (River Fish)
இது குறித்த தகவல் அறிந்ததும், 'மீகாங் அதிசயங்கள்' அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் விரைந்து வந்து மீனை ஆய்வு செய்தனர். இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் ஸெப் ஹோகன் கூறியதாவது: உலகிலேயே ஆற்று நீரில் வாழும் மிகப் பெரிய திருக்கை மீன் கம்போடியாவில் கிடைத்துள்ளது.
இது, 13 அடி நீளம், 300 கிலோ எடை உள்ளதாக இருக்கிறது. இதற்கு முன், 2005ல் தாய்லாந்தின் மீகாங் ஆற்றில், 293 கிலோ கெளுத்தி மீன் கிடைத்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறிஅடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விஞ்ஞானிகள், இந்த திருக்கை மீனின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, அதன் வாலில் கண்காணிப்பு கருவியை பொருத்தி மீண்டும் ஆற்றில் விட்டனர். இந்த சாதனை மீனை பிடித்த மீனவருக்கு, இழப்பீடாக, 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க
தமிழகத்திற்கு பறந்து வந்த ஆர்க்டிக் ஸ்குவா: பறவைகள் கண்காணிப்பில் தகவல்!