ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் லனார்க் வேளாண் மையத்தில், ஆண்டுதோறும் செம்மறி ஆடுகளை ஏலம் விடும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்திற்கு, பிறந்து ஆறு மாதங்களே ஆன, 'டெக்சல்' வகையைச் சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று, கொண்டுவரப்பட்டது.
'டெக்சல் ராம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடு, 3.58 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு ஏலத்தில் போயுள்ளதால், இந்த செம்மறி ஆடு, 'இரட்டை வைரம்' Double Dinamod என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த, 2009- ஆம் ஆண்டு செம்மறி ஆடு ஒன்று, 2.3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதுவே அதிகபட்ச விலையாக இது வரை இருந்து வந்தது. இந்நிலையில், இந்த டெக்சல் வகை செம்மறி ஆடு, அதை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது, உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
டெக்சல்' வகை செம்மறி ஆடு அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம், அதன் முழுமையான நிறமான, சரியான தலை மற்றும் மென்மையான தங்க நிறம், என்று அனைத்தும் கவனிக்கத்தக்கதாக இருந்தாக சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த வகை டெக்சல் செம்மறி ஆடுகள் அதன் ரோமம் மற்றும் இறைச்சிக்காகவே பலரும் வாங்குவர். இதன் ரோமங்கள், உள்ளாடை நூல்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன
மேலும் படிக்க...
PM Kisan முறைகேடு: 13 மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை!!
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து?