News

Wednesday, 17 April 2019 04:03 PM

வரும் மே 13,14-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் டபிள்யூடிஓ (WTO) மாநாடு  நடை பெற உள்ளது. இதில் பங்கேற்க 25 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் டெல்லி வர உள்ளனர். தேர்தல் சமயம் என்பதால் கூட்டத்தை  நடத்துவதற்கு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடமும் மத்திய வர்த்தக அமைச்சகதிடமும் அனுமதி பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் உலக வர்த்தகம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, வழி முறைகள் போன்றவை விவாதிக்கபடும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த  கூட்டத்தில் சில நாடுகள் மேற் கொண்டுள்ள பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரி கிறது. ஜெனீவா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்  அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகள் தொடரலாம் என வலியுறுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையான வர்த்தகபோர், அதனால் மற்ற நாடுகளின் வர்த்தக சரிவு போன்றவை விவாதிக்க படவுள்ளது. சமீபத்தில் டபிள்யூடிஓ இரு நாடுகளின் நடவடிக்கையை எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூடிஓ அமைச்சர்கள் கூட்டத்தில் அவர்களது பலம், பலவீனம், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எங்கனம் எதிர்கொள்வது மற்றும் உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் போன்றவை விவாதிக்க பட உள்ளன.

டபிள்யூடிஓ அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது  இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவதுகூட்டம் நடத்தப்பட்டது. அப்போது 50 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பியூனஸ் அயர்சில் 2017-ல் ஏற்பட்ட முட்டுக் கட்டையை நீக்கும் முயற்சிகளும் இந்திய தரப்பில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)