கரீஃப் பருவத்தில், 1095.38 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் பயிரிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
பருப்புகள், தானியங்கள், தினை மற்றும் எண்ணெய் வித்துகள் விதைப்பது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், நெல் விதைத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், இயந்திரங்கள் மற்றும் கடன் போன்ற சரியான நேரத்தில் மத்திய அரசால் செய்யப்பட்ட இடையீடுகளால், பெருந்தொற்று காலத்திலும் பெரிய நிலப்பரப்பில் விளைச்சல் நடந்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. சரியான நேரத்தில் செயல்பட்டு, தொழில்நுட்பத்தைக் கையாண்டு, அரசு திட்டங்களின் பலன்களை அடைந்து இந்த சாதனையை படைத்ததற்காக விவசாயிகளை அமைச்சர் பாராட்டினார்.
நடப்பு காரீப் பருவத்துக்கான இறுதி புள்ளிவிவரங்கள் அக்டோபா் 2-ம் தேதி தெரியவரும் என்றார்.
நெல் - Paddy
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 365.92 லட்சம் ஹெக்டேரிலிருந்து 8.27 சதவீதம் அதிகரித்து 396.18 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.
பருப்புகள் - Pulses
பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பும் 130.68 லட்சம் ஹெக்டேரிலிருந்து 4.67 சதவீதம் உயா்ந்து 136.79 லட்சம் ஹெக்டேரைத் தொட்டுள்ளது.
உணவு தானியங்கள் - Coarse Cereals
முக்கிய உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 176.25 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.77 சதவீதம் வளா்ச்சி கண்டு 179.36 லட்சம் ஹெக்டேராகியுள்ளது.
எண்ணெய் வித்துக்கள் - oil seeds
எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பும் 174.00 லட்சம் ஹெக்டேரிலிருந்து கணிசமாக 12 சதவீதம் அதிகரித்து 194.75 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.
பணப் பயிா்களான கரும்பு பயிரிடும் பரப்பு 51.71 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.30 சதவீதம் உயா்ந்து 52.38 லட்சம் ஹெக்டேராகவும், பருத்தி பயிரிடும் பரப்பளவு 124.90 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.24 சதவீதம் உயா்ந்து 128.95 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளன.
கரீஃப் பருவத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 6.32% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!