News

Sunday, 22 November 2020 08:20 AM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில்  ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த யோகா வகுப்புகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம் கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மத்திய சிறைச்சாலைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டது.

கைதிகளுக்கு யோகா? (Yoga for Inmates)

இதில் 8,165ஆண் கைதிகள், 3453 பெண் கைதிகள், 3,018 ஆண் ஊழியர்கள், 950 பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,529 பங்கேற்று பயனடைந்தனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக சிம்ம கரியா என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக யோக நமஸ்காரம், காஷா கரியாஆகிய பயிற்சிகளை ஈஷயாவின் யோகா ஆசிரியர்கள் கற்றுத்தந்தனர். 

அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மண் பரிசோதனை ஏன் அவசியம்?

பாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)